செய்திகள்

புதுச்சேரி டி.ஜி.பி, போலீஸ் சூப்பிரண்டு ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-11-02 16:49 IST   |   Update On 2017-11-02 16:49:00 IST
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்த கோரும் வழக்கில் டி.ஜி.பி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வன்முறை இல்லாத அமைதியான சூழலை ஏற்படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வினோத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த 2015-ம் ஆண்டு முதல் புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் எத்தனை மோதல்கள் நடைபெற்றுள்ளன? எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன? என்று நீதிபதி கிருபாகரன் கேள்விகளை எழுப்பினார்.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக புதுவை டி.ஜி.பி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வரும் 7-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News