செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை: கொள்ளிடத்தில் 88 மி.மீட்டர் பதிவு

Published On 2017-10-30 13:29 GMT   |   Update On 2017-10-30 13:29 GMT
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்:

டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை கடந்த 4 நாட்களாக பெய்து வருகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருவையாறு, வல்லம், செங்கிப்பட்டி உள்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

இந்த மழை காரணமாக சாலையோரம் உள்ள பள்ளங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. நேற்று பெய்த பலத்த மழை காரணமாக ஒருசில இடங்களில் மரக்கிளைகள் முரிந்து விழுந்தன.

இன்று தஞ்சையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்பு காலை 7 மணியளவில் சில நிமிடங்கள் மட்டுமே தூறல் மழை பெய்தது. கும்பகோணத்தில் இன்று காலை தொடர் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்சண நிலை உருவானது. வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று நன்னிலம், திருவாரூர் உள்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. திருத்துறைபூண்டியில் அதிகபட்சமாக 38.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. இன்று மாவட்டம் முழுவதும் மேகமூட்டமாக உள்ளது.

நாகை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று கொள்ளிடம், சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி, வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 88.5 மில்லிமீட்டரும், சீர்காழியில் 61.2 மில்லிமீட்டரும் மழை பெய்தது. இந்த மழை காரணமாக வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News