செய்திகள்
கந்து வட்டி பிரச்சனை தொடர்பாக தாக்கப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கார்த்திக்.

பள்ளிபாளையம் அருகே கந்து வட்டி தகராறில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்

Published On 2017-10-30 10:37 GMT   |   Update On 2017-10-30 10:37 GMT
பள்ளிபாளையம் அருகே கந்துவட்டி தகராறில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:

ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையம் அடுத்த அவத்திபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). ஆட்டோ டிரைவர்.

இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் குடும்ப சூழ்நிலை காரணமாக ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

கடன் வாங்கும் போது குறைந்த அளவு வட்டி என்று சொல்லி விட்டு பின்னர் அதிகமாக வட்டி வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக விரோதமும் இருந்து வந்துள்ளது. கார்த்திக் தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட்டார்.

இந்நிலையில் கார்த்திக் அண்ணன் முனிராஜ். அதே நபரிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இது தொடர்பாக முனிராஜ், கார்த்திடம் பேச வேண்டும் என்று அந்த நபர் இருவரையும் சம்பவ இடத்துக்கு வர சொல்லி உள்ளார்.

கார்த்திக்கும், அவரது அண்ணன் முனிராஜீம் அந்த நபர் கூறிய இடத்துக்கு வந்தனர். அங்கு அந்த நபருடன் இன்னும் சிலர் இருந்தனர். அவர்களிடையே தகராறு ஏற்பட்டு கார்த்திக்கை அந்த நபரும் அவருடன் இருந்தவர்களும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags:    

Similar News