செய்திகள்
கீரமங்கலம் அருகே ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் தங்க நகைகள்-2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
கீரமங்கலம் அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் தங்க நகைகள்- 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கீரமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள வேம்பங்குடி மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 60). வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு, சென்னையில் வேலை செய்யும் தனது மகன் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்று இருந்தார். இந்த நிலையில் நேற்று ராஜசேகர் சென்னையில் இருந்து வேம்பங்குடி மேற்கு கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்றபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த பீரோக்களை உடைத்து, அதில் இருந்த தங்க நகைகள், ரூ.ஆயிரத்து 500 மற்றும் வீட்டில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டுபோன தங்க நகைகள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து ராஜசேகர் கீரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வேம்பங்குடி பகுதியில் கடந்த பல மாதங்களாகவே ஆள் இல்லாத வீடுகளில் திருட்டு சம்பவம் நடப்பது தொடர்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.