செய்திகள்

ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தந்தை-மகள் படுகாயம்

Published On 2017-10-23 17:32 IST   |   Update On 2017-10-23 17:32:00 IST
ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் தந்தை-மகள் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு அடுத்த வெள்ளோடு நத்தக்காட்டு பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 50). இவரது மனைவி கலைவாணி (38). மகள் நிசாந்தி (17). இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் கவுண்டச்சிபாளையத்தில் இருந்து ராசாம் பாளையத்துக்கு வந்தனர். மோட்டார் சைக்கிளை மனோகரன் ஓட்டினார். தாய் மற்றும் மகள் பின் பகுதியில் அமர்ந்திருந்தனர்.

அப்போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டது. இதில் மனோகரன் மற்றும் அவரது மகள் நிசாந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது.அவர்களை உடனடியாக மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News