செய்திகள்
ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் என்ஜினீயர் கைது
விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் என்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் ஜோனா. இவர் பசுமை வீடு திட்டத்திற்கு விண்ணப்பித்த பயனாளிகளிடம் ரூ.2ஆயிரம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ரெங்க நாயகி என்பவர் புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து ஜோனாவை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த போலீசார், ரசாயனம் தடவிய பணத்தை ரெங்கநாயகியிடம் கொடுத்து அனுப்பினர். அவர் இன்று காலை ஜோனாவிடம் பணத்தை கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜோனாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.