செய்திகள்

மகேந்திரமங்கலம் அருகே கிணற்றில் மூதாட்டி பிணம்

Published On 2017-10-19 18:54 IST   |   Update On 2017-10-19 18:55:00 IST
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டியின் பிணம் கிணற்றில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள ஜெக்கசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மேகலா (வயது 75).  மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

கடந்த 8-ந்தேதி மேகலா வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பின்னர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த சித்துராஜ் என்பவருடைய தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் மேகலா பிணமாக மிதந்தார்.
பின்னர் போலீசார், கிணற்றில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News