செய்திகள்

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Published On 2017-10-19 10:21 GMT   |   Update On 2017-10-19 10:21 GMT
மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதை அடுத்து கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை:

மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் வடகிழக்கு மாவட்டங்களின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா மாநிலம் பூரி அருகே தற்போது நிலைகொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி பூரி அருகே கரையை கடக்க வாய்ப்பு இருப்பாதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Tags:    

Similar News