செய்திகள்
விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகை கேட்டு கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை வழங்கக்கோரி தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டது.
வேதாரண்யம் :
வேதாரண்யத்தில் ஆதனூர் மணியன்தீவு, ராமகிருஷ்ணாபுரம், நெய் விளக்கு, குரவப்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்மாநில விவசாய சங்க தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு தீபாவளி உதவித்தொகை ரூ.5000 வழங்கக்கோரி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சிவ குருபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர், நாராயணன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மாரியப்பன், ஆகியோர் தலைமையில் தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
விவசாய தொழிலாளர்கள் தாங்கள் வீடுகளிலும் இதே கோரிக்கைளை வலியுறுத்தி கறுப்பு கொடி ஏற்றினர்.