செய்திகள்

மயிலாடுதுறை அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்

Published On 2017-10-14 16:28 IST   |   Update On 2017-10-14 16:28:00 IST
மயிலாடுதுறை அருகே இன்று காலை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் மேல மருதாண்டநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த கடன் சங்கத்தில் நீடுர், தருமதானபுரம், தேத்தூர், கழனிவாசல் உள்ளிட்ட 6 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி கடன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு அந்த கடன் சங்கத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 6 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து இன்று காலை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது பயிர்காப்பீட்டு தொகையை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து தாசில்தார் காந்திமதி சம்பவ இடத்திற்கு சென்று பயிர்காப்பீட்டு தொகை முறையாக வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Similar News