செய்திகள்

ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையம் 3 மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு

Published On 2017-09-27 16:29 GMT   |   Update On 2017-09-27 16:29 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆணையம் 3 மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை:

ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்களும், கேள்விகளும் தொடர்ந்து பரவி வந்த நிலையில், இது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி, ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், விசாரணை ஆணையத்திற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் அமைக்க தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.

அதன் அடிப்படையில், நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் கமிஷனை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக் கமிஷன், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அவர் மரணம் அடைந்த நாள் வரையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரித்து, தனது விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News