செய்திகள்

அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் நியமனம்: விஜயகாந்த் அறிவிப்பு

Published On 2017-09-18 21:14 IST   |   Update On 2017-09-18 21:14:00 IST
அரியலூர் மாவட்ட தே.மு. தி.க. புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. அமைப்பு தேர்தல் 3.9.2017 முதல் 7.9.2017 வரை நடைபெற்றது.

இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாவட்ட செயலாளராக இராம.ஜெயவேல், மாவட்ட தலைவராக ஜோசப் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளராக கவியரசன், மாவட்ட துணை செயலாளர்களாக தெய்வ சிகாமணி, எழிலரசன், ஜெயபாலன், தேன்மொழி, தலைமை செயற்குழு உறுப்பினர்களாக குமார், ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர்களாக ஜேக்கப் ஜெராமியஸ், கலியமூர்த்தி, ராஜா, செந்தில்குமார், ஜெயவேல் ஆகியோர்களை மாவட்ட செயலாளர் இராம.ஜெயவேல் பரிந்துரையின் பேரில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

புதிய நிர்வாகிகளுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News