செய்திகள்
மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாணவி அனிதா தற்கொலை: சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

Published On 2017-09-02 15:13 IST   |   Update On 2017-09-02 15:13:00 IST
அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டற்கு இரங்கல் தெரிவித்து மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சிதம்பரம்:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.

இந்த மருத்துவக்கல்லூரியில் மருத்துவம், பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதை கண்டித்து கடந்த 2 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாகவும் நீடித்தது.

இந்த நிலையில் நேற்று இரவு ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி முன்பு மாணவ-மாணவிகள் திரண்டனர். அவர்கள் அரியலூர் மாவட்டம் செந்தூர் அருகே உள்ள குழுமூர் காலனியை சேர்ந்த மாணவி அனிதா (வயது 17) நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டற்கு இரங்கல் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Similar News