செய்திகள்
வத்திராயிருப்பு அருகே மின்வாரிய ஆய்வாளர் மர்ம மரணம்
வத்திராயிருப்பு அருகே மின்வாரிய ஆய்வாளர் மர்மமான நிலையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பை அடுத்த ஆகாசம்பட்டியைச் சேர்ந்தவர் ரத்னபாண்டியன் (வயது 54). மின்வாரிய ஆய்வாளர்.
கடந்த 25-ந் தேதி இவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால், வத்திராயிருப்பு போலீசில் ரத்னபாண்டியனின் மகன் கார்த்திகேயன் புகார் செய்தார்.
இந்த நிலையில் மகாராஜ புரம்- தாணிப் பாறை சாலையில் ரத்ன பாண்டியன் சென்ற மோட்டார் சைக்கிள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் பார்த்தபோது, அந்தப்பகுதியில் உள்ள முட்புதருக்குள் ரத்னபாண்டியன் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
அவர் தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.