செய்திகள்
தேவகோட்டை அருகே பலசரக்கு கடையின் கதவை உடைத்து பணம் கொள்ளை
தேவகோட்டை அருகே பலசரக்கு கடையில் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
தேவகோட்டை அருகே உள்ள முப்பையூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 42), இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சுப்பிரமணியன் வீட்டுக்கு சென்று விட்டார்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லா பெட்டியில் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கம், ரூ. 2ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசில் சுப்பிரமணியன் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்.