செய்திகள்
அரியலூரில் மணல் எடுத்து செல்ல சிறப்பு பதிவு முகாம்
அரியலூர் மாவட்டத்தில் மணல் எடுத்து செல்ல சிறப்பு பதிவு முகாம் வருகிற 7-ந்தேதி முதல் நடைபெறவுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் அரசு மணல் குவாரியில் இருந்து மணல் எடுத்துச் செல்வதற்கு லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் பதிவு எண்ணை ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ள 7.8.2017 முதல் 11.8.2017 வரை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு பதிவு முகாம் நடைபெறவுள்ளது.
மேலும், லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் அனைத்து ஆவணங்களையும் கொண்டு வந்து ஆன்லைன் மூலம் பதிவு செய்துக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார்.