செய்திகள்

பொன்னமராவதியில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2017-08-04 19:44 IST   |   Update On 2017-08-04 19:44:00 IST
பொன்னமராவதி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது.
பொன்னமராவதி:

பொன்னமராவதி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்கீழ் பொன்னமராவதி வட்டாரத்தில் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பொன்னமராவதி வட்டார அட்மா திட்ட தலைவர் காசிகண்ணப்பன் தலைமை வகித்தார்.

வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குநர் எட்வர்ட் சிங்  வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் பற்றியும் அதை விவசாயிகள் எவ்வாறு பயன்படுத்தி கொள்வது என்பது பற்றியும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.

அட்மா திட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி வட்டார தொழில்நுட்ப மேலாளர் தேவி எடுத்துக் கூறினார். வட்டார வேளாண்மை அலுவலர் கவிதா மற்றும் துணை வேளாண்மை அலுவலர் முருகன் ஆகியோர் மானாவரி மேம்பாட்டு திட்டம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினர்.

அதனை தொடர்ந்து அட்மா ஆலோசனைகுழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு தீர்மானங்கள் போடப்பட்டு ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் ப்ரியங்கா நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜீ செய்திருந்தார்.

Similar News