செய்திகள்

கீரனூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை

Published On 2017-08-03 19:36 IST   |   Update On 2017-08-03 19:36:00 IST
கீரனூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை முழுமையாக கட்டுபடுத்த பேரூராட்சி பணியாளர்களும், சுகாதார துறையினரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
கீரனூர்:

கீரனூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.சென்றவாரம் காய்ச்சல் ஏற்பட்டு 2-ம் வகுப்பு மாணவி உயிர் இழந்தார். இதனால் பொது மக்களிடையே பீதியும்,பயமும் ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள், பள்ளி குழந்தைகள் உள்பட 20 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை முழுமையாக கட்டுபடுத்த பேரூராட்சி பணியாளர்களும்,சுகாதார துறையினரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

மக்கள் பயன்படுத்தும் காவிரி நீரில் குளோரின் கலந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பேரூராட்சி பணியாளர்களுடன் செயல்அலுவலர்  கணேசனும் இணைந்து வீதிவீதியாக சென்று குப்பைகள், சாக்கடைகள் நீண்ட நாள்களாக அகற்றபடாமல் கிடக்கும் சுகாதாரமற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

காலை8 மணி முதல் மாலை 6 மணிவரை இடை விடாமல் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணியாளர்களுடன் சேர்ந்து செயல் அலுவலர் கணேசன் கொசு மருந்து அடித்தார். இதனால் பணியாளர்கள் உற்சாகமாக வேலை பார்த்தனர்.       

Similar News