செய்திகள்
நிலவேம்பு குடிநீர் அருந்துவதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்கலாம்: புதுக்கோட்டை கலெக்டர் அறிவுரை
நிலவேம்பு குடிநீர் அருந்துவதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்கலாம் என புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சித்த மருத்துவத் துறையின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு சிறப்பு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கல் முகாம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
டெங்கு காய்ச்சல் ஒரு வகை வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். டயர், பயன்படுத்தாத உடைந்த சிமெண்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாதத் தொட்டிகள் போன்றவற்றில் தேங்கும் தூய நீரில் உருவாகும். இந்த கொசுக்கள் கடிக்கும்போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஸ் கொசு ஆரோக்கியமானவர்களை கடிக்கும் பொழுது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. இக்கொசுக்கள் பகலில் மட்டுமே கடிக்கும். காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.
ஏடிஸ் கொசுக்கள் தேங்கி நிற்கும் நல்லத் தண்ணீரில் மட்டுமே உற்பத்தி ஆகிறது. டயர், தேங்காய் ஓடு, பிளாஸ்டிக் டப்பா, பூந்தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தேங்கி கிடக்கும் நல்ல நீரில் உற்பத்தி ஆகிறது. எனவே பொதுமக்கள் ஏடிஸ் கொசு உருவாகும் இடங்களை அழித்து வீடு, பள்ளி, பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொண்டால் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். இந்நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான தற்காப்பு மருந்துகள் உள்ளன. பொதுமக்கள் அனைவரும் நிலவேம்பு குடிநீர் அருந்துவதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம். பெரியவர்கள் 30 மி.லிட்டரும், சிறியவர்கள் 15 மி.லிட்டரும் தினமும் காலை 3 முதல் 5 நாட்கள் வரை பருகிவர நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்றும் கூறினார்.