செய்திகள்

அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2017-07-26 18:32 IST   |   Update On 2017-07-26 18:32:00 IST
அப்துல்கலாமின் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுவதால் புதுக்கோட்டை மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் தளங்களில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.

வழக்கமாக இன்று கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீன்களை பிடித்துக்  கொண்டு நாளை கரை திரும்புவர். இந்த நிலையில் நாளை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவு தினம்  அனுசரிக்கப்படுவதால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Similar News