செய்திகள்
சோழிங்கநல்லூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்: 45 பேர் கைது
சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் இன்று காலை மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாக சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோழிங்கநல்லூர்:
சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் இன்று காலை மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திடீரென்று சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீத்தேன் திட்டத்தை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாததால் அனைவரும் கலைந்து செல்லும்படி கூறினர்.
ஆனால் மாணவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டப்படி கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மொத்தம் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.