செய்திகள்

சென்னை விமானத்தில் 3 கிலோ தங்கம் சிக்கியது - வாலிபர் கைது

Published On 2017-07-25 08:01 GMT   |   Update On 2017-07-25 08:01 GMT
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்திய வாலிபரை அதிகாரிகள் கைது செய்தனர். மூன்று கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்:

துபாயில் இருந்து சென்னை வரும் பயணிகள் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று காலை 6 மணியளவில் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இறங்கிய பயணிகளை கண்காணித்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வாலிபரை தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். அவரது உடமைகளை சோதனை செய்தபோது எதுவும் சிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அவர் பயணம் செய்த விமானத்தின் இருக்கையை சோதனையிட்டனர். அப்போது இருக்கை கிழிக்கப்பட்டு அதன் அடியில் 100 கிராம் எடையில் 30 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 3 கிலோ தங்கம் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தங்கம் கடத்தி வந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவரைப் பற்றிய விபரத்தை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

பிடிபட்ட வாலிபர் கடத்தல் தங்கத்தை இருக்கையின் கீழ் மறைத்து வைத்து வந்து இருப்பது மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளின் சோதனை குறித்து முன் கூட்டியே அவருக்கு யாரேனும் தகவல் தெரிவித்து இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

எனவே விமான நிலைய ஊழியர்கள் தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தனரா? என்ற கோணத்திலும் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News