செய்திகள்

திருப்புவனம் அருகே கழுத்தை அறுத்து பெண் கொடூர கொலை

Published On 2017-07-21 15:48 IST   |   Update On 2017-07-21 15:48:00 IST
ஆடு மேய்க்க சென்ற பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பூவந்தியை சேர்ந்தவர் தவமணி (வயது 33). இவரது மனைவி லோகாம்பாள் (31). இவர்களுக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

லோகாம்பாள் தினமும் ஏனாதி கண்மாய் பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்.

அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் ஆடுமேய்ப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் லோகாம்பாள் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். மாலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் பதட்டமடைந்த தவமணி, தனது மனைவியை தேடிச் சென்றார். அப்போது ஏனாதி கண்மாய் பகுதியில் லோகாம்பாள் மர்மமான முறையில் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் 11 இடங்களில் அரிவாள்வெட்டு காயங்கள் இருந்தன.

தகவல் அறிந்த பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகாம்பாளை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News