செய்திகள்

மயிலாடுதுறை அருகே கடையின் ‌ஷட்டரை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை

Published On 2017-07-19 16:28 IST   |   Update On 2017-07-19 16:28:00 IST
மயிலாடுதுறை அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆக்கூர் முக்கூட்டு ரோட்டில் பருத்தி வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருபவர் பாலகிருஷ்ணன்.

இவர் விவசாயிகளிடம் இருந்து பருத்தியை வாங்கி விற்பனை செய்து வருகிறார். நேற்று இரவு இவர் கடையில் ரூ.3 லட்சம் பணத்தை வைத்து விட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் கடையின் ‌ஷட்டரை உடைத்து உள்ளே வைத்து இருந்த ரூ. 3 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இன்று காலை கடையை திறக்க வந்த பாலகிருஷ்ணன் பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்கு பதிவு செய்து ரூ. 3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

Similar News