செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 26-ந்தேதி நடக்கிறது

Published On 2017-07-18 23:26 IST   |   Update On 2017-07-18 23:26:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 26-ந்தேதி நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை:

எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு, எரிவாயு சிலிண்டர் நிரப்ப பதிவு செய்வதில் சிரமங்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து வரப் பெறும் புகார்களைப்பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

எனவே, எரிவாயு இணைப்பு குறித்து தங்களது குறைகளை தெரிவிக்க விரும்பும் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் நேரில் தெரிவிக்கலாம். தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

Similar News