செய்திகள்
திருப்புவனம் அருகே வீடு புகுந்து நகை- பணம் திருடிய வாலிபர்கள் கைது
திருப்புவனம் அருகே வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
திருப்புவனம் அருகே உள்ள திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் மலர் விழி (வயது 30). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு சாவியை மறைவான இடத்தில் வைத்து விட்டு சென்றார்.
இதைநோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் கதவை நைசாக திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் பிரோவில் இருந்த ¾ பவுன் நகை மற்றும் பணத்தை திருடினர். அந்த சமயம் வெளியில் சென்றிருந்த மலர்விழி வீடு திரும்பினார். அப்போது 2 பேர் கொள்ளையடிப்பதை பார்த்து கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் வந்து 2 பேரையும் பிடித்து பூவந்தி போலீசில் ஒப்படைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முகமது 2 பேரிடமும் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம் இள மனூரை சேர்ந்த கருப்பசாமி (19). அறிவுகுமார் (19) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து நகை- பணத்தை பறிமுதல் செய்தனர்.