செய்திகள்

கந்தர்வக்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-07-17 22:55 IST   |   Update On 2017-07-17 22:55:00 IST
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கந்தர்வக் கோட்டையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கந்தர்வகோட்டை:

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கந்தர்வக் கோட்டையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்பாட்டத்திற்கு கந்தர்வக்கோட்டை ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார்.  ஒன்றிய தலைவர் துணைத்தலைவர்கள் மகாலிங்கம், நிர்மலா ஒன்றிய இணைச் செயலாளர்கள் மரியசெல்வம், தேவி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் காமராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

கூட்டத்தில் 10லிருந்து 30ஆண்டுகள் வரை பணிமுடித்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய தேக்க நிலை ஊதியத்தை நிலுவையுடன் உடனடியாக வழங்க வேண்டும், 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமுல்படுத்தி, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், 20சதவீத இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும்.

சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களை, காப்பீட்டு திட்டத்தில் இணைத்து இலவச காப்பீட்டுத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், மகப்பேறு விடுப்பு 270 நாட்களை உடனடியாக அமுல்படுத்த வேண்டும், ஓய்வு கால ஒட்டுமொத்த தொகையை ரூ.3லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், ஒன்றிய பொருளாளர் எம்.செல்வக்குமார் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

Similar News