செய்திகள்

மு.க. ஸ்டாலின் கருத்துக்கு கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்

Published On 2017-07-16 20:54 IST   |   Update On 2017-07-16 20:54:00 IST
தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருக்கிறது என்று கமல் கூறிய கருத்திற்கு மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருந்தார். அதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தனியார் தொலைகாட்சி நடத்தும் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையிலும் நிகழ்ச்சி தொடர்ந்து பிரபலமாக திரையிடப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி குறித்த விமரசனங்கள் காவல் துறையில் புகார் அளிப்பது வரை சென்றதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மற்றும் நிகழ்ச்சி சார்ந்து எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனிடையே செய்தியாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த கமல்ஹாசன், தமிழக அரிசியலின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிரம்பியுள்ளது எனக் குற்றஞ்சாட்டினர். கமல்ஹாசன் குற்றச்சாட்டிற்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல் மந்திரிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ‘‘மக்கள் மனதில் உள்ளதையே நடிகர் கமல்ஹாசன் வெளிப்படுத்தியுள்ளார்’’ என தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.



கமல்ஹாசன் கருத்தை வரவேற்கும் விதமாக மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு ட்விட்டர் மூலம் நடிகர் கமல்ஹாசன் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு,
நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே.

ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது..’’ என்று  பதிவிட்டுள்ளார்.

Similar News