செய்திகள்

திருப்புவனம் அருகே ஆசிரியையிடம் நகை பறிப்பு

Published On 2017-07-15 15:00 IST   |   Update On 2017-07-15 15:00:00 IST
திருப்புவனம் அருகே ஆசிரியையிடம் நகை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியை சேர்ந்தவர் நாகரத்தினம். இவர் மணலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று மாலை பள்ளி முடிந்து பஸ் ஏறுவதற்காக மணலூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து 2 வாலிபர்கள் வந்தனர்.

அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென்று நாகரத்தினத்தை மறித்து, அவரது கழுத்தில் கிடந்த 7½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் வழக்குப் பதிவு செய்து நகையை பறித்து சென்றவர்களை தேடி வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை போன்றவை சர்வசாதாரணமாக நடந்து வருகின்றன. போலீசார் தீவிர கவனம் செலுத்தி கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News