செய்திகள்

காளையார்கோவிலில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

Published On 2017-07-14 18:26 IST   |   Update On 2017-07-14 18:27:00 IST
காளையார்கோவிலில் இன்று துப்புரவு தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரில் குப்பை அள்ளும் பணிகள் பாதிக்கப்பட்டன.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஊராட்சி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு குப்பைகளை சேகரிக்க நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக குப்பை லாரிகள், டிரை சைக்கிள் என 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.

குப்பை அள்ளும் வாகனங்கள் கடந்த சில மாதங்களாக பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் குப்பைகள் ரோட்டில் விழுகின்றன. மேலும் அடிக்கடி பழுதாகியும் வருகின்றன.

இது குறித்து துப்புரவு தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும், வாகனத்தின் பழுதுகள் இதுவரை சரி பார்க்கப்படவில்லை.

இதை கண்டித்தும் குப்பை லாரிகள், டிரை சைக்கிள்களை பழுது நீக்கக்கோரியும் இன்று 50-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரில் குப்பை அள்ளும் பணிகள் பாதிக்கப்பட்டன. தகவல் அறிந்த அதிகாரிகள் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Similar News