செய்திகள்
காரைக்குடி அருகே 4½ வயது சிறுமி தீயில் கருகி பலி
காரைக்குடி அருகே 4½ வயது சிறுமி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள புதுவயல் யூனியன் ஆபீஸ் ரோட்டை சேர்ந்தவர் சேக் அலாவுதீன். இவரது மனைவி அஸ்மா (வயது 27). இவர்களுக்கு 4½ வயதில் ரக்ஷிதா என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று அஸ்மா தனது மகளுடன் அருகில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றார். அப்போது அஸ்மா அங்குள்ள முத்துலட்சுமி என்பவரின் வீட்டுக்கு தனது மகளுடன் சென்று பேசிக் கொண்டிருந்தார்.
அங்கு சாம்பிராணி புகை போடுவதற்காக முத்து லட்சுமி தூபக்காலில் தீ மூட்டினார், அதில் மண்எண்ணெயை ஊற்றிய போது அருகில் நின்றிருந்த ரக்ஷிதா ஆடை மீது எதிர்பாராத விதமாக தீப் பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென உடலில் பரவியது.
வலியால் அலறித்துடித்த ரக்ஷிதாவை அங்கிருந்தவர்கள் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் சிறுமி மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரக்ஷிதா பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.