செய்திகள்
பொன்னமராவதி அருகே குடிநீர் பிரச்சினை: போர்க்கால நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் வலியுறுத்தல்
பொன்னமராவதி அருகே குடிநீர் பிரச்சினை சமாளிக்க அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட 42 பஞ்சாயத்துகளில் அதிக மக்கள் தொகை கொண்ட வார்பட்டியில் சுமார் நான்கு மாதங்களுக்கு மேலாக குடிநீர் தட்டுபாடு நிலவி வந்தது.
இதனால் நாள்தோறும் வந்தடைந்த குடிநீர் தற்போது 3 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை வருவதால் குடிப்பது மட்டுமின்றி குளிக்க, சமைக்க மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் என்ன செய்வதறியாமல் இருந்து வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் அய்தர்அலி கூறியதாவது, அதிக மக்கள்தொகை கொண்ட வார்பட்டியில் இது போன்ற பிரச்சினை நிலவுவதால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் மூன்று நாளைக்கு ஒருமுறையே குளிக்க முடிகிறது என்றும் அத்தியாவசிய தண்ணீர் தேவை பூர்த்தி செய்ய கூடுதல் ஆழ்துளை கிணறு அமைக்கபட்டால் பொது மக்களின் தண்ணீர் தேவை தற்காளியமாக தீர்க்க முடியும் இது தொடர் கதையானால் சாலை மறியலில் ஈடுபட்டபோவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
சம்மந்தபட்ட அதிகாரி விரைந்து நடவடிக்கை எடுக்கபட வேண்டும் எனவும் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.