செய்திகள்

மயிலாடுதுறையில் பெண் மர்ம மரணம்

Published On 2017-07-10 17:40 IST   |   Update On 2017-07-10 17:40:00 IST
மயிலாடுதுறையில் பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை பகுதியை சேர்ந்த பாலமுருகன் மனைவி திரிவேணி (வயது 41). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் திரிவேணி, குடும்ப பிரச்சினை காரணமாக மனவேதனையுடன் இருந்தார். சம்பவத்தன்று இரவில் திரிவேணி தூங்க சென்றார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் திரிவேணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து திரிவேணியின் தாய் பிருந்தாவனம் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்துபோன திரிவேணியின் உடல், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Similar News