செய்திகள்
வெறும் வாக்குறுதி போதாது சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: நெடுவாசல் கிராம மக்கள்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என நெடுவாசல் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை கண்டித்து நெடுவாசலில் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். ஒவ்வொரு நாளும் நூதன போராட்டங்களை நடத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், இத்திட்டத்திற்கு எதிராகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே உள்ள திட்டலில் இன்று 88-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்திருந்த ஒருவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அப்போது அப்பகுதி பெண்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்திக்கொண்டும், இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை என்றும், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை நெடுவாசல் பகுதி பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
நாங்கள் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம். இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி மத்திய மாநில அரசுகள் மற்றும் மாவட்டநிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை இத்திட்டத்தை ரத்து செய்து எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே நாங்கள் இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுப்பது போன்ற நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால் இத்திட்டத்தை ரத்து செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.