செய்திகள்
கந்தர்வக்கோட்டையில் 10-ம்வகுப்பு மாணவி மாயம்
கந்தர்வக்கோட்டையில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற 10-ம்வகுப்பு மாணவி மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் மாணவியை தேடி வருகிறார்கள்.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மலையப்பட்டியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் அபினா (வயது 15). இவர் அங்குள்ள பெண்கள் மேல்நிலைபள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 5-ந்தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அபினா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கந்தர்வக்கோட்டை போலீசில் முத்து புகார் செய்தார். போலீசார் அபினா எங்கு சென்றார்? யாராவது அவரை கடத்தி சென்றனரா? என்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.