செய்திகள்
முரளீதரராவ் பேட்டி அளித்தபோது எடுத்த படம்.

சத்துணவு திட்டத்தில் பசும்பாலை சேர்க்க வேண்டும்: முரளீதரராவ்

Published On 2017-07-06 17:24 IST   |   Update On 2017-07-06 17:24:00 IST
சத்துணவு திட்டத்தில் பசும்பாலை சேர்க்க வேண்டும் என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளரும், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளருமான முரளீதரராவ் கூறினார்.
மதுரை:

பாரதிய ஜனதா தேசிய செயலாளரும், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளருமான முரளீதரராவ் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்து முன்னணி தலைவர் பண்டிட் தயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், கட்சியை பலப்படுத்தும் வகையிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன்.

தமிழக மக்கள் ஊழலற்ற மற்றும் நல்லாட்சியை விரும்புகிறார்கள். இதற்கு ஒரே தீர்வாக பா.ஜனதா மட்டுமே உள்ளது.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்தில் பசும்பாலையும் சேர்க்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.


ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அப்படி பாதிப்பு எதுவும் இல்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சிறு-குறு தொழில்கள் வளரும்.

இந்த வரி விதிப்பில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் அதனை திருத்திக்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது.

மதுரையில் கொசு தொல்லை, குடிநீர் பிரச்சனை அதிகம் உள்ளது. இதில் மாநகராட்சி போதிய கவனம் செலுத்தவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News