செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: முதல்-அமைச்சருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை
குட்கா, பான் மசாலா விற்பனையை அனுமதிக்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் குட்கா, பான் மசாலா ஆகிய பொருட்களை விற்பனை செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால் இந்த பொருட்களை தமிழ்நாட்டில் விற்பனை செய்ய அனுமதிப்பதற்காக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஓராண்டுக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
எனவே தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதித்த விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் அவரை பதவிநீக்கம் செய்ய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடந்து இருப்பதால் உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
நாளை முதல் அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால் பல்வேறு துறைகள் கொந்தளித்துப் போய் இருக்கின்றன. ஜி.எஸ்.டி. வரியால் சிறு, குறு, தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.
வணிகர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். மருந்துகடை உரிமையாளர்கள், சிவகாசி பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள், சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமலாக்கத்தை தள்ளி வைக்க வேண்டும். வரிவிகிதத்தையும் குறைக்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோரி தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாநில அரசை பொறுத்தவரை 3 அணிகளுக்கும் மத்திய அரசு மீதான பயத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டி போட்டுக்கொண்டு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்துக்கு துரோகம் விளைவிக்கும் பல்வேறு முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க 3 அணியினரும் எந்தவித நடவடிக்கையயும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.