செய்திகள்

தாம்பரம் அருகே தூர்வாரிய குளத்தின் மண்ணை விற்றதாக தி.மு.க.வினர் மீது புகார்

Published On 2017-06-16 16:43 IST   |   Update On 2017-06-16 16:43:00 IST
தாம்பரம் அருகே தூர் வாரிய குளத்தின் மண்ணை விற்றதாக தி.மு.க.வினர் மீது புகார் செய்யப்பட்டது. லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

தாம்பரம்:

தாம்பரம் சேலையூரை அடுத்து அகரம் தென் ஊராட்சியில் நல்ல தண்ணீர் குளம் உள்ளது. கடந்த வாரம் இந்த குளம் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன் ஏற்பாட்டின் பேரில் தூர் வாரும் பணி தொடங்கியது.

அதில் தி.மு.க எம்.எல். ஏ.க்கள் தா.மோ. அன்பரசன், எஸ். ஆர். ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். தூர்வாரும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் நடந்தது.

தூர்வாரப்படும் மண்ணை குளக்கரையின் மீது கொட்டி பலப்படுத்த வேண்டும். ஆனால் குளத்தில் 10 அடி ஆழம் தோண்டப்பட்ட மண் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

ஒரு லாரி மண் ரூ 1000 முதல் ரூ 1500 வரை விற்கப்பட்டது. இதை அறிந்த பொதுமக்கள தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் இது குறித்து புகார் செய்தனர்.

எனவே, அது பற்றி விசாரணை நடத்த தாசில்தார் குமுதாவை அனுப்பி வைத்தார். உடனே அவர்நல்ல தண்ணீர் குளத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது குளத்தில் மண் அள்ளிக்கொண்டிருந்த ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News