செய்திகள்

தொழில் அதிபர் கொலையில் வாலிபர் கைது

Published On 2017-06-16 14:43 IST   |   Update On 2017-06-16 14:43:00 IST
ஈக்காட்டுதாங்கலில் தொழில் அதிபர் கொலையில் கைதான வாலிபர், ‘கடன் தராததால் கொலை செய்தேன்’ என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆலந்தூர்:

ஈக்காட்டுதாங்கல், ஜோதி நகர், 1-வது தெருவில் வசித்து வந்தவர் உதயபாலன். தொழில் அதிபர். கடந்த 5-ந்தேதி அவர் வீட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் பிரபாகரன் கொலை செய்து இருப்பது தெரிந்தது.

இதையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

உதயபாலனிடம் கடனாக பணம் கேட்டேன். அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அவரை மிரட்டி பணத்தை வாங்க முடிவு செய்தேன்.

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு சென்றேன். அப்போது ஏற்பட்ட தகராறில் கத்தியால் அவரை வெட்டி கொன்றேன். பின்னர் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை எடுத்து தப்பினேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் பிரபாகரன் மட்டும் இந்த கொலையை செய்திருக்க முடியாது என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். வேறு யாரேனும் அவருக்கு உதவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.




Similar News