செய்திகள்

கல்பாக்கத்தில் மது விற்பனையை கண்டித்து போலீஸ் நிலையம் முற்றுகை

Published On 2017-06-16 13:10 IST   |   Update On 2017-06-16 13:11:00 IST
கல்பாக்கத்தில் மது விற்பனையை தடுக்காத போலீசாரை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கல்பாக்கம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மாமல்லபுரம்:

கல்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டதால் பல இடங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து வருகிறது. கள்ளச்சாராய விற்பனையும் நடக்கிறது.

இதனால் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மது விற்பனையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கல்பாக்கம் போலீசில் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் மது விற்பனையை தடுக்காத போலீசாரை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கல்பாக்கம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களிடம் திருக்கழுக்குன்றம் மது விலக்கு இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

கள்ளத்தனமாக மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே கல்பாக்கம் பகுதியில் மது விற்ற பாப்பாத்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Similar News