செய்திகள்
கத்தாரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 1 கிலோ தங்கம் கடத்தல்: ஆந்திர வாலிபர் கைது
கத்தாரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ‘எமர்ஜன்சி’ விளக்கில் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்திய ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
கத்தார், தோகாவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ஸ்ரீராமுலுவிடம் விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர் வைத்திருந்த ‘எமர்ஜன்சி’ விளக்கை பிரித்து பார்த்தனர்.
அதன் உள்ளே 10 தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்துசுமார் 1 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீராமுலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தங்கம் கடத்தலுக்கு அதிகாரிகள் யாரேனும் உதவினார்களா? என்றும் விசாரணை நடக்கிறது.