பவானி அருகே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
ஈரோடு:
பவானியை அடுத்த ஊத்துக்காடு, குருசாமி பாளையத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மனைவி ஜீவிதா. கணேஷ்குமார் ஜீவிதாவை காதலித்து கடந்த 8 மாதத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
கணேஷ்குமாருக்கும், ஜீவிதாவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி கணவன்-மனைவி சண்டை போட்டு கொள்வார்களாம்.
இந்நிலையில் கடந்த 7-ந் தேதி ஜீவிதா கணேஷ்குமாருடன் கோபித்து கொண்டு அவரின் தாத்தா வீட்டிற்கு சென்று விட்டார்.
சம்பவத்தன்று கணேஷ்குமார் ஜீவிதாவுக்கு போன் செய்தபோது ஜீவிதா பேசவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் மனவேதனை அடைந்த கணேஷ்குமார் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி உள்ளார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணேஷ்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலனின்றி கணேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.