செய்திகள்
நீலாங்கரை அருகே வாலிபர் அடித்து கொலை
நீலாங்கரை அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவான்மியூர்:
நீலாங்கரை அடுத்த கானாத்தூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள பக்கிங்காம் கால்வாயில் இன்று காலை வாலிபர் பிணமாக மிதந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன.
வாலிபர் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆந்திராவை சேர்ந்த நீலாம்பவசிங் என்பதும் அவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து கால்வாயில் வீசி சென்றதும் தெரியவந்தது.
அவர் அப்பகுதியில் கட்டிட கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்து விட்டு உடலை கால்வாயில் வீசி சென்று இருப்பார்கள் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கிறார்கள்.