செய்திகள்
குழந்தைகளுக்கு இலவசமாக ஆதார் அட்டை எடுத்து கொள்ளலாம்: கலெக்டர் அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக ஆதார் அட்டை எடுத்து கொள்ளலாம் என்று கலெக்டர்(பொறுப்பு)தனசேகரன் தெரிவித்துள்ளார்.
அரியலுர்:
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் 6-வட்டாரங்களிலும் 15,699 முன்பருவக்கல்வி குழந்தைகள் பயனடைகின்றனர். இக்குழந்தைகளுக்கு யூனி பார்ம், காலனிகளுடன் அங்கன் வாடியில் வாரத்திற்கு 3 நாட்கள் வேகவைத்த முட்டை மற்றும் கலவை சாதம் வழங்கப்படுகிறது. முன் பருவக்கல்வியும் அளிக்கப்படுகிறது.
6 மாதம் முதல் 3வயதுக்குட்பட்ட 27,000 குழந்தைகளுக்கு, குழந்தைகளின் வளர்ச்சியை தெரிந்துக் கொள்ள மாதந்தோறும் அங்கன்வாடியில் எடை எடுக்கப்படுகிறது. எடைக் குறைவான 22201 எண்ணிக்கையிலான குழந்தைகள் அனைவருக்கும் இணை உணவு (சத்துருண்டை) வழங்கப்படுகிறது.
ஆதார் புகைப்படம் பெரியவர்களுக்கு மட்டும் அல்ல, பிறந்தது முதல் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் எடுக்கப்பட வேண்டும். இனி வருங்காலங்களில் ஆதார் அட்டை இருந்தால் அரசாங்கம் வழங்கும் அனைத்து பயன்களையும் குழந்தைகளுக்கும் பெற முடியும். குழந்தைகளை ஆரம்பப் பள்ளியில் சேர்க்கவும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்து பயன்பெறவும் மிகவும் அவசியம் தேவை. ஆகவே தாய்மார்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் ஊரில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சென்று இலவசமாக ஆதார் புகைப்படம் எடுத்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன் தெரிவித்துள்ளார்.