செய்திகள்
ரவுண்டானா அமைப்பதில் முறைகேடு: அரியலூர் அருகே தி.மு.க. வினர் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில் ரவுண்டானா அமைத்ததில் முறைகேடு செய்தவர்களை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி நான்கு வழிச் சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் சென்டர் மீடியனுடன் ரவுண்டானா அமைக்க ரூ.1.43 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் அமைக்கப்பட்ட ரவுண்டானா முறைப்படி அமைக்காமல், போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குறுகலாக தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகன நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்தும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ரவுண்டானா அமைப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டு ஊழல் செய்தவர்களை கண்டித்து, மாவட்ட தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித்தார்.
அரியலூர் ஒன்றிய செயலாளர் ஜோதி வேல், தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர்கள் சந்திரசேகரன், சவுந்தர்ராஜன், தி.மு.க. நகர செயலாளர் சிவக்குமார், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா, இளைஞரணி துணை அமைப்பாளர் லூயிகதிரவன், முரசொலி குமார் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தகவலறிந்து அரியலூர் போலீசார் மற்றும் வட்டாட்சியர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், அதுவரை ரவுண்டானா பணி நிறுத்தி வைக்கப்படும் எனவும், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் புளியமரங்கள் அகற்றப்படும் எனவும் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.