செய்திகள்

சத்தியமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் பலி

Published On 2017-05-30 16:55 IST   |   Update On 2017-05-30 16:55:00 IST
சத்தியமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

சத்தியமங்கலம் அடுத்த ஒன்டியூர் புதுதோட்டத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது62). இவர் சம்பவத்தன்று சத்தியமங்கலம்- கொடிவேரி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென துரைசாமி மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அந்த வழியாக சென்ற ஒரு பெண் மீது மோதியது. இதில் துரைசாமிக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி துரைசாமி பரிதாமாக இறந்து விட்டார். பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News