செய்திகள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 93.33 சதவீதம் பேர் தேர்ச்சி

Published On 2017-05-19 18:21 IST   |   Update On 2017-05-19 18:21:00 IST
தமிழகம் முழுவதும் இன்று எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அரியலூர் மாவட்டம் 93.33 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் தேர்வெழுதிய 11241 பேரில் மாணவர்கள் 4911 பேரும், மாணவிகள் 5580 பேரும் சேர்த்து 10491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.33 சதவீதமாகும். அரசு பள்ளிகளின் தேர்ச்சி 90 சதவீதமாகும். 27 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக அரியலூர் மாவட்டத்தில் 62 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 2015-ம் ஆண்டு 90.70 சதவீதமும், 2016-ம் ஆண்டு 92.52 சதவீதமும், தற்போது 93.33 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.
பின்தங்கிய மாவட்டமான அரியலூர் மாவட்டம் ஆண்டுக்கு ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சதவீதம் அதிகரித்து வருவது பெற்றோர் மற்றும் பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் 94.98 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இது தேர்ச்சி சதவீதம் அடிப்படையில் மாநில அளவில் 17-வது இடத்தை பிடித்துள்ளது. பெரம்பலூர்  மாவட்டத்தில் மொத்தம் 136 பள்ளிகளைச் சேர்ந்த 9,764 மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். சாதனை படைத்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி  மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Similar News