செய்திகள்

அந்தியூரில் மதுக்கடைக்கு எதிர்ப்பு: தாலுகா அலுவலகம் முற்றுகை

Published On 2017-05-13 16:45 IST   |   Update On 2017-05-13 16:45:00 IST
அந்தியூரில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அந்தியூர்:

அந்தியூர் அருகே பிரம்மதேசம் பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அந்த பகுதி மக்கள் நேற்று இரவு 9.30 மணிக்கு சாலை மறியல் செய்தனர். இந்த கடை அந்தியூர்- ஆப்பக்கூடல் சாலையில் செயல்படுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

சாலையின் முன் எப்போதும் கூட்டமாக இருக்கிறது. மது அருந்தி விட்டு சாலையின் ஓரமாக மது போதையில் படுத்து இருக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் பெண்களால் நடந்து செல்ல முடியவில்லை.

எனவே இந்த மதுகடையை அகற்ற வேண்டும் என்று அந்தியூர் ஆப்பக்கூடல் சாலையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை சாலை மறியல் செய்தனர்.

சம்பவ இடத்துக்கு அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வந்து பேச்சுவார்த்தை செய்து மண்டல மேலாளர் இடத்தில் கூறி கடையை அகற்ற ஏற்பாடு செய்வதாக கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரப்பரப்பாக காணப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் மக்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். தொடர்ந்து டாஸ்மாக் அதிகாரியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

Similar News