செய்திகள்

சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

Published On 2017-04-18 15:29 IST   |   Update On 2017-04-18 15:29:00 IST
சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை புதன் கிழமைக்கு தள்ளி வைத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை நேரில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

ஆனால், சசிகலாவை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும் அவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சசிகலா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு மத்திய அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜாகீர்உசேன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா தரப்பில் மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் சசிகலா தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை புதன் கிழமைக்கு (நாளை) தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Similar News