செய்திகள்

அம்பேத்கார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்

Published On 2017-04-11 10:41 IST   |   Update On 2017-04-11 10:41:00 IST
அம்பேத்காரின் 127-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, கோயம்பேடு நூறடிச் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கார் சிலைக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
சென்னை:

தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அம்பேத்காரின் 127-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, கோயம்பேடு நூறடிச் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கார் சிலைக்கு 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரைசாமி மற்றும் கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

அப்போது சென்னை வடக்கு, சென்னை கிழக்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைச் செயற் குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக் கழக- வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணி, இளைஞரணி, இலக்கிய அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு தொண்டர் அணி, வழக்கறிஞர் அணி, மீனவர் அணி மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News